தபால் பெட்டியுள்.

வ‌ச‌ப்ப‌டாத எழுத்துக்க‌ளுக்கிடையில்
வாசித்த‌ வார்த்தைக‌ள் ந‌ம‌க்கான‌
இடைவெளியை அனைத்துக்கொண்ட‌து

என‌க்கு நான் எழுதி அனுப்புவ‌தும்
உன‌க்காக‌ நீ எழுதிக் கொண்ட‌தும்
எழுத்துக‌ளை தாண்டி மெய்யும் உயிரும்
இனைந்த‌ த‌ருண‌ங்க‌ளில் வாழ்ந்த‌
வாழ்கையின் நினைவ‌லைக‌ள்
இன்ன‌முன் தபால் பெட்டியுள்!

நான் எழுதிய‌ மெய்யும்
நீ எழுதிய‌ உயிரும்
ஏதோ ஒரு அஞ்ச‌ல் நிலைய‌த்தில்
ச‌ந்தித்து, என்னையும் உன்னையும்
ந‌ல‌ம் விசாரித்த‌ நிக‌ழ்வை நான்
ப‌டித்த‌ உன் க‌டித‌ம் சொல்லிய‌து.

அன்பே தெரியுமா உன‌க்கு!
உன் க‌டித‌ம் என் க‌டித‌த்தின்மேல்
ச‌ந்தித்த‌ நொடியில்
காத‌ல் வ‌ச‌ப்ப‌ட்ட‌தாம்,

உன‌க்க‌னுப்பிய‌ க‌டித‌த்தின்்
ந‌க‌ல் கேட்டு காத்துக்கிட‌க்கின்ற‌து
இங்கு!

என் பொக்கிஷ‌க்குவிய‌லுக்கு
செல்ல‌ ம‌றுத்து!

Tags: ,

  1. Parthasarathy’s avatar

    தங்களது வலைதளத்தை
    பார்த்தேன், மிக அருமை,
    இனையத்தில் உங்களுடைய தமிழ்
    பணி குறிப்பிடதக்கது.
    தங்களது கவிதைகள் அற்புதம்!

  2. அடலேறு’s avatar

    வணக்கம் நண்பரே,
    அலகியலில் காதல் நடை புரிந்துள்ளீர்கள். சிறப்பான முயற்சி. கவிதைகள் அனைத்தும் ரசனை ரகம். வாழ்த்துக்கள் இது வரை பதிப்பித்தவைகளுக்கும் இனி பதிப்பிக்காக வார்த்தை தரவு தளத்தில் இருப்பவைகளுக்கும்.
    நிறைய எழுதுங்கள். காதல் கவியில் நீங்கள் எட்டப்போகும் உயர் தூரம் மிக அருகில் உள்ளது. வாழ்த்துக்கள்

  3. Divya sis’s avatar

    Each and every word expresses the feeling of love… it’s toooooooooooo…………….. good

  4. priyarathna’s avatar

    nice sir
    by
    thangalin manavi


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image

Page optimized by WP Minify WordPress Plugin