* இறகு தொலைத்த
பறவை போல
உன்னை தேடுகின்றேன்
வனமெல்லாம்
எங்காவது உன் வாசத்தின்
சாயலில் நான் விழ்ந்து கிடக்கின்றேனா? என்று.
* இலையின் அதிர்வில்
உதிர்ந்த பூவின்
விசும்பல்
எனை விட்டு
நீ வீடு செல்லும்
அனைத்து பிரிவினிலும்.
* வெயில் தூரளில்
குடை விரித்தாய்
கைப்பிடியில்
நான்
தவிக்கும்
என் நினைவுகளில்
உடைகின்றது ஒரு
சிறு குமிழி.
* இதழ் கடந்து
மழை ருசித்த
நாவிற்கு
வானம்
குடை பிடித்தது
வானவில்.
Tags: காதல், ரம்மியமே!
It is very nice……..
இதழ் கடந்து
மழை ருசித்த
நாவிற்குவானம்
குடை பிடித்தது
வானவில்.
VERY NICE
No comments
Comments feed for this article
Trackback link: http://thottarayaswamy.adadaa.com/2010/02/17/ரம்மியமே/trackback/