காதல்

You are currently browsing the archive for the காதல் category.

இரண்டு வரிகள்
எனக்கா எழுத மாட்டாயா?
வினவி விட்டு
சென்றுவிட்டாய் நீ!

மொத்த தமிழெழுத்துக்களும்
என்னுடன் யுத்தத்திற்கு
தயாராகிவிட்டது!

சமாதன உடன்படிக்கைக்கு
பின்- இருபது வார்த்தைகளுடன்
எழுதத் தொடங்கினேன்!

கைக்கலப்பு மேலோங்கிவிட்டது
அந்த எழுத்துகளுக்கிடையே.
முதழெழுத்தாய் யார் நிற்பதென்று!

பின் என்னதான் செய்ய?

இதையே வைத்துக்கொள்
என் அடிமை சாசனமாக!

இதற்காக நீ மற்றொரு
உலக யுத்தத்தை
என்னிடம் தொடங்கிவிடாதே!

உன் இதழில் நனைந்தே
உருகிப்போன
பொன் சங்கிலியின்
புலம்பலை கேட்டதுமுதல்
புலம்பித் தவிக்கின்றது
என் இதழ்கள் – உன்னிடம்
உருகிப்போக!
முத்தமிட்டு..
முத்தமிட்டு…

 

மழைக் காலக்குறிப்புகளாக
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்

குடைக்கம்பில்
ஒட்டிக்கொண்ட
உன் கைரேகையினை
மின்னல் கீற்றுகள் என!    

மழை மறுத்த
காலங்களில்
உன் நினைவுச்சாயல்களில்
நான் நனைந்துகொள்ள!!

என்னை
நிலைக்கண்ணாடியில்
காணும் எல்லா
தருணங்களிலும்

திகட்டாத இம்சையாக
எனக்குப் பின்னால்
நீ தெரிந்து
தொந்தரவு செய்கின்றாய்
தினமும்

இப்பொழுதாவது
காட்டு உன்
கண்ணாடி கண்னை

உன்னுள் இருக்கும்
என் முழுமையை
கண்டுகொள்கிறேன்.

இப்படி என்னை
பார்க்காதே என்கிறாயே?

நீயே சொல்.
பின் எப்படிதான்
உன்னை பார்ப்பதாம்!

வர்ணனைகள் கேளாத
சிலைகள் உண்டோ
பெண்ணே!

*
எதைக் காட்டி அழைத்தாயோ
தெரியவில்லை

தாய்முகம் கண்ட
சேய் போல்
உன்னை நோக்கி

தவழ்ந்தது
மனசு.

மடிந்தவைகளெல்லாம்
உன்னிடமிருந்து
பெறும்போது மட்டுமே
உயிர்த்தெழுகினறன

என் உதடுகள்
மட்டும் விதிவிலக்காயென்ன?

 

எந்த திசையிலிருந்து
பார்த்தாலும்
உன்னையே
ஞாபகப்படுத்துகின்றன

மண்னில் கறையும்முன்
என் நெஞ்சம் கொண்ட
ஆசையினைப் போல

தண்டினில் தொங்கிய
நீர்க்குமிழ்கள்


தேவதையே
உன் கால்கள்
விட்டு சென்ற
கடற்கறை சுவடுகளை,
மணலைவிடுத்து நான்
கைகளில் சேகரித்துக்கொண்டிருக்கின்றேன்!

எப்போதும் உன்னை
ஞாபகப்படுத்தும்
வைரமணிகள் கிடைத்த
சந்தோசத்தில்!

நீ தனியாக
அமர்ந்து
நம் நினைவுகளை
விழுங்கும் போதெல்லாம்
அன்பே!

விக்கல் எடுத்தே
வியர்த்து போகிறது
என் மனசு.

நீ தவறுகள் செய்யும்
பொழுதுகளிலெல்லாம்

எப்போதும் போல
இன்றும் மறந்து

என்னை உன் எச்சிலால்
நனைத்துவிட்டாய்

உன் நகங்களின்
இடுக்கினில்
வாழ்ந்துக் கிடப்பதுதான்
எவ்வளவு சுகம்.


விட்டு பிரியும்போதெல்லாம்
ஏனடி?
என் சிறகுகளை
திருடிக்கொள்கின்றாய்
நீ,

உன் வானத்தை
என்னிடம் தந்துவிட்டு!


உன்னை எங்கும்
சுமந்தே செல்கின்றேன்
கூட்டை தவிற்த்து
வாழ முடியாத
நத்தையினைப் போல

என்தன் செயல்களில்
உன்தன் சாயலை
தவிர்க்க முடியாமையும்
பாதையெங்கும் சுவடை
விட்டுச் செல்லும்
நத்தையினை போலத்தான்

நீயென்றாகிப்போன நான்
சுமந்துத் திறிகின்றேன்.

« Older entries

Page optimized by WP Minify WordPress Plugin

WordPress › Error

Sorry, you are not allowed to access this page.