காதல்

You are currently browsing the archive for the காதல் category.

சொன்னால்
“நம்பமாட்டேன்”
என்கின்றாய்
முகம் திருப்பிக் கொண்டு!

முகர்ந்துப் பார்
கவிதையில்
உன் வாசம்

வருடிப்பார்
காகிதத்தில்
உன் பரிசம்

வாசித்துப்பார்
உன்னை நேசிக்கும்
என் இதயம்

நம்பிக்கை வரவில்லையா?
கசக்கி எறிந்துப்பார்

நான் இறந்துக்கிடப்பது
புரியும்.

______

ஏன்டீ என்னை இப்படி
இம்சை செய்கிறாய்?

நான் தந்த முத்ததில்
என்ன குறைக்கண்டாய்

திருப்பி வாங்கிக்கொண்டு
வேறொன்று தா என்று,
உன் விழியடியில்
கிரங்கிக் கொண்டிருக்கும்
இவனிடம், தலையனை கொண்டு
அடிக்கின்றாய்.

______

நீ கோபமாக
இருக்கின்றாய்.

சரி, பிறகென்ன
நீ முத்தம்
தந்து என்னிடம்
கெஞ்சுவாய்

இனிமேல்
இப்படி நடந்துகொள்ளமாட்டேன்
என்று.!

அதற்கேனடி
இவ்வளவு நேரமாக
காற்கவைக்கின்றாய் என்னை?

_______

மக்கு,
உன் தவறுகளில்,
சரியாக செய்ய
கற்றுத்தருபவள்
நான்.

அதற்காக
முத்தத்தை கூடவா
ஒழுங்காக இடமாட்டாய்?

____

உன் ஞாபகங்களுக்கு
அப்பால் நின்று
நனைந்து கொண்டிருக்கின்றது
என் மனசு

குடைக்கேட்டு
வரவில்லை
என் கவிதைகள்
உன்னிடம்

நீ சிந்திவிடும்
ஒவ்வொரு கண்ணீர்
துளியிடமும்
மன்னிப்புக்கேட்கத்தான்.

************

சிவப்பு செதில்களின்
சினுங்கள் கேட்டே
விழிக்கின்றன கண்கள்
காலையில்

இரவில் அவைகளின்
முனங்கள்களுடனே
துயில்கின்றன
அதே கண்கள்

நான் எதை இழந்து
தேடுகின்றேன் என
அறியாமலேயே

கண்டெடுக்கின்றது
உன்னை மட்டும்
மனசு

தேடலில் சுகம் கண்டு
தேடலையே தொழிலாக்கியது
கண்கள்

ஆமாம், நீ எங்கிருக்கின்றாய்
தலைவா?

பூப்பூக்கா செடிகளை
மட்டும் நட்டு வைத்தேன்
பூவனம் முழுவதும்
நான்

என்னடி செய்தாய்
நீ
இலைகளும் பூத்து
வீசுகின்றது உன் வாசம்..


மறந்தும் குடை
எடுத்துச் செல்வதில்லை
நான்

மார்கழி மாத
மாலை மழையில் நீ
நனைந்து மழைக்கு
காய்ச்சல் தந்த

அந்த
எதார்த்த நிகழ்ச்சியிலிருந்து…

உனக்கு தெரியாது
என்பதுபோல் என்
காலை உனது கால்
உரசிக்கொண்டு
நாம் பேசியிருக்க

நீலவான வீதியில்
நான் கட்டிய
உனக்கான வீட்டில்
நான் மட்டும் தனியே
வாழ்ந்துக்கொண்டிருக்கின்றேன்

நீல வானில் நீ வருகையில்
வின்மீன்கள் குத்தும் என்று
என் கைகள் சிவக்க
அப்புறப்படுத்தி 
நீ முத்தமிட்டு
எனை சிவக்க செய்த
அந்த மழைக்கால
உன் கடைசி பிரிதலின்
நினைவுகளின் ஆருதலுடன்

நிலவாக நீ
வருவாய் என்று.

அந்த தொடுவானப்பூக்களில்
என்னதான் ஒழிந்திருக்கின்றது

யாதுமற்ற உன் சூன்யதில்
மட்டிக்கொண்ட என் மனசைப்போல

நீ சொன்னாலின்றி
எதுவுமே கேட்பதில்லை
எனக்கு

நான் இன்னும்
சொல்லாத என் காதலைப்போல!

முத்தம் பூத்த
பூமியில்
கண்ணாடி மழை

உடைந்து
நொறுங்கியது
மழையின் துளிகள்

பூக்களுக்குள்
தஞ்சம் புகுந்தது

உன் நா மின்னல்
சுலற்றி அடித்தலில்

நீரோடை மட்டும்
ஏனடீ என் மனதில்?

 

உன்னோடு
மழையில்
நனைந்த சமயங்களில்தான்

குடைக்குள்
பூத்த காளான்கள்
போலே

என்னுள்ளே
மழைபொழிந்த
மௌனங்களை
உணர்ந்தேன்.

நீ தலைசாய்ந்து
பார்க்கும் போதெல்லாம்

குடைசாய்கிறது
என் மனசு.

எத்தனை முறை
சொல்லியிருக்கின்றேன்

பெண்கள் மட்டும்
என்றெழுதி வைத்த
இருக்கையில்
பயணிக்காதே என்று
தேவதையே?

என் பிரிவினில்
நீ தந்த வலியைவிட

நீ எனை வாழ்த்திச்
சென்ற வரிகளே
என்னை கதரிஅழச்
செய்தது.

« Older entries § Newer entries »

Page optimized by WP Minify WordPress Plugin

WordPress › Error

Sorry, you are not allowed to access this page.