தேவதைகளின் ஊர்வலம்

You are currently browsing the archive for the தேவதைகளின் ஊர்வலம் category.

த‌னித்த‌னி
வர்ணமாய்ப் பிரித்து
உத‌ட்டில் கரைத்து
உயிரை வ‌ரைந்த‌
ஓவியம் இது
உட‌ல் காடெங்கும் முத்த‌ம்.

Tags:

கவிதை..
அதுதான்அவள் பலகீனம்.

அதுதான்
அவள் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்பு.

அதனால்தான்
அவ‌ள் அருகாமையில்
எப்போதும்
உயிர்த்துடிப்புடன் நான்.

Tags: ,

நீ நான்

எதை இழ‌ந்து தேடினாலும்
நீயே கிடைக்க‌ பெறுகிறாய்

எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து

எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ
அவைக‌ளே நீயாகிறாய்

பின் என்ன‌தான் செய்வ‌தாம்
உன்னை காத‌லிக்க‌ ம‌ட்டுமே செய்வ‌தை த‌விற!

Tags: ,

உனக்காக
வானத்தை
வசப்படுத்த மாட்டேன்

உன் விழிப் பெண்
கண்ணீர் கற்பிழக்காமல்
பார்த்துக் கொள்வேன்

நட்சத்திரங்களால்
ஜரிகை நெய்ய மாட்டேன

என் சுவாசச் சுவரெங்கும்
சித்திரமாய் உன்னை
சித்தரிப்பேன்

வானவில்லின்
வண்ணங்கொண்டு
உனக்கு சேலை
செய்ய மாட்டேன்

உன் வாலிபம்
வானவில் காண
சாரல் மழையாயிருப்பேன்

மேகத்தால்
உனக்கொரு
மெத்தையிட மாட்டேன்

மழை மேகமாய்
உனை நனைத்து
பெண் வாசனை
நுகர்வேன்

உன் உடல் மட்டும் அணைக்காது
உயிரையும் சேர்த்தணைப்பேன்

அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
நீ அணியும் போதும்
அருகிலிருப்பேன்.

ச‌ம்ம‌த‌மா அன்பே!!

பெய்யென‌ பெய்யும் ம‌ழை

Tags: ,

என்னால்
எதுவும் முடியாது!
நீ என்றான‌
நான் என்ப‌தில்!
உன்னை நேசிப்ப‌தைவிட‌!!!

Tags: ,

proposal_1

க‌ட‌ற்க‌ரை ம‌ண‌ல்
அந்தி வான‌ம்
ஏங்கும் அலை
ஒழிந்த‌ சூரிய‌ன்
நீ
நான்
காத‌ல்!!!

பின் க‌விதைக‌ளாய்
என்ன‌ சொல்வ‌து
நீ நான் நாம் என்ற‌
காத‌லை த‌விற‌!!!

Tags:

அலைக‌ளின் ந‌டுவில்
விடுத‌லை பெற்ற‌
விருச்சங்க‌ளில்
கறைந்தொழுகிய
க‌ட‌ற்க‌ரை ம‌ண‌லில்
காத‌ல்

தீண்ட‌லில் தொட‌ங்கி
சூவாச‌த்தில் முடிய‌த் துடிக்கும்
ஷிருங்கார சாச‌ன‌த்தின்
சில்மிசியே!

என‌க்காக‌ ந‌ட‌த்த‌
உன் கால்க‌ளும்
உன‌க்காக‌ ம‌ண‌ல் அள்ளிய‌
என் கைக‌ளும்
ந‌ம‌க்கான‌ காத‌லை
ப‌திய‌ம் போட்ட‌து
க‌ரையெல்லாம்!

Tags: ,

சமவெளியில்
தொலைத்த முத்தத்தை
உன் இதழ்மடுவில்
தேடுகின்றேன்

கிடைக்கும் என்ற
நம்பிக்கை விட
தேடல் மட்டும்
நீடிக்கவே ஏங்குகிறது
மனசு!

பின் எப்படித்தான்
பழகுவதாம் குடை
மறைவினில் முத்தமிட்டு!

Tags: ,


* இற‌கு தொலைத்த‌
ப‌ற‌வை போல‌
உன்னை தேடுகின்றேன்
வ‌ன‌மெல்லாம்

எங்காவ‌து உன் வாச‌த்தின்
சாய‌லில் நான் விழ்ந்து கிட‌க்கின்றேனா? என்று.

* இலையின் அதிர்வில்
உதிர்ந்த‌ பூவின்
விசும்ப‌ல்

எனை விட்டு
நீ வீடு செல்லும்
அனைத்து பிரிவினிலும்.

* வெயில் தூர‌ளில்
குடை விரித்தாய்
கைப்பிடியில்
நான்

த‌விக்கும்
என் நினைவுக‌ளில்
உடைகின்ற‌து ஒரு
சிறு குமிழி.

* இத‌ழ் க‌ட‌ந்து
ம‌ழை ருசித்த‌
நாவிற்கு

வான‌ம்
குடை பிடித்த‌து
வான‌வில்.

Tags: ,

நீ விழுந்து
நான் அழுது
என‌க்கு ம‌ருந்திட்டு 
உன‌க்கு குண‌மான‌து
காதலால்!

மேக‌மெல்லாம் ம‌ழைத்துளி
நீ ந‌னைந்து விளையாட‌
நான் சேமித்த‌ க‌ண்ணீர் துளிக‌ள்.

பாவ‌ம் அந்த‌ ப‌ட்டாம்பூச்சி
கொஞ்ச‌ம் ந‌க‌ர்ந்து செல்
தேன் குடிக்க‌ சுற்றி சுற்றி
வ‌ருகிற‌து உன்னையே!

Tags:

« Older entries

Page optimized by WP Minify WordPress Plugin

WordPress › Error

Sorry, you are not allowed to access this page.