நீ

You are currently browsing the archive for the நீ category.

உன்னோடு
மழையில்
நனைந்த சமயங்களில்தான்

குடைக்குள்
பூத்த காளான்கள்
போலே

என்னுள்ளே
மழைபொழிந்த
மௌனங்களை
உணர்ந்தேன்.

 

என் வசந்தகாலத்தின்
 கடைசி,
காதல் சின்னமான
அந்த பூத்துக்குலுங்கிய
பூமரத்தின்
அடியிலிருந்துதான்
எழுதுகின்றேன் இதை

நம் பிரிதலில்
தன்னை பிளந்து
கிளைகளை ஒடிந்துக்கொண்டது
மரம்

உன்னை போலவே
இரக்கமற்றவளே..

நீ என்னோடு இல்லாத
ஒவ்வொரு மணித்துளியையும்
சேமித்து வைத்திருக்கின்றேன்

அந்த நிமிடங்கள்
யுகங்களானாலும்
காத்திருப்பேன்
நான்

நீ அனுப்புவதாக
சொல்லிச்சென்ற
ஈரமுத்தம் பதித்த
கடிதத்திற்காக…

புள்ளிகளை 
நிலத்திலிட்டு
கோலத்தை
என் மனதினில்
வரைகின்றாய்
தினமும்

உன் வீட்டு
வாசலில் நீர் தெளித்து  கோலம்

நான்: நீ என் பேரழகி..
நீ: பொய் சொல்கின்றாய், கவிஞனுக்கு அழகே பொய்தான்..
நன: நீ என் கவிகளுக்கு உயிர்தந்தவள்
நீ: ….?!
நான்: உலகத்தில் அனைவருக்கும் பேரழகி தாய்தான்
நீ: ……!
(கன்னம் சிவக்க என்னை உற்று நோக்கினாய் முதல் முறையாக, நானும் )

உன்னைத் தவிர
எல்லாம் அழகழகாக
தோன்றுதடி

நீ பேரழகியாக
நான் என்னியமுதல்…

சொட்டுச்சொட்டாக
உள் இறங்கி
உரைந்துப் பனிச்சிலையானது!

மனசெல்லாம்
நீ!

உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
எந்தபூவை
சூடினாலும்
இரண்டாமிடத்துக்கு
தள்ளிவிடுகிறாய்..?


உனை
எங்கு பார்த்தேன்
என்று ஞயாபகமில்லை

தேடிப்பார்த்ததில்
மொத்தமாய்
உயிரை
ஆக்கிரமித்து
என்னுள் – நீ !


என்னவள்
சூட மலர்ந்தது
நிலா..

அவள்
கன்னத்து
மிலிர்தலைக் கண்டு
நாணி-
நாளை மலர்வதாய்
சொல்லி மறைந்த்து..

இதைவிட சிறப்பாய்..

« Older entries

Page optimized by WP Minify WordPress Plugin

WordPress › Error

Sorry, you are not allowed to access this page.