சமவெளியில்
தொலைத்த முத்தத்தை
உன் இதழ்மடுவில்
தேடுகின்றேன்

கிடைக்கும் என்ற
நம்பிக்கை விட
தேடல் மட்டும்
நீடிக்கவே ஏங்குகிறது
மனசு!

பின் எப்படித்தான்
பழகுவதாம் குடை
மறைவினில் முத்தமிட்டு!

Tags: ,


* இற‌கு தொலைத்த‌
ப‌ற‌வை போல‌
உன்னை தேடுகின்றேன்
வ‌ன‌மெல்லாம்

எங்காவ‌து உன் வாச‌த்தின்
சாய‌லில் நான் விழ்ந்து கிட‌க்கின்றேனா? என்று.

* இலையின் அதிர்வில்
உதிர்ந்த‌ பூவின்
விசும்ப‌ல்

எனை விட்டு
நீ வீடு செல்லும்
அனைத்து பிரிவினிலும்.

* வெயில் தூர‌ளில்
குடை விரித்தாய்
கைப்பிடியில்
நான்

த‌விக்கும்
என் நினைவுக‌ளில்
உடைகின்ற‌து ஒரு
சிறு குமிழி.

* இத‌ழ் க‌ட‌ந்து
ம‌ழை ருசித்த‌
நாவிற்கு

வான‌ம்
குடை பிடித்த‌து
வான‌வில்.

Tags: ,

நீ விழுந்து
நான் அழுது
என‌க்கு ம‌ருந்திட்டு 
உன‌க்கு குண‌மான‌து
காதலால்!

மேக‌மெல்லாம் ம‌ழைத்துளி
நீ ந‌னைந்து விளையாட‌
நான் சேமித்த‌ க‌ண்ணீர் துளிக‌ள்.

பாவ‌ம் அந்த‌ ப‌ட்டாம்பூச்சி
கொஞ்ச‌ம் ந‌க‌ர்ந்து செல்
தேன் குடிக்க‌ சுற்றி சுற்றி
வ‌ருகிற‌து உன்னையே!

Tags:

முன் இர‌வின் முழு ஒளியில்
ப‌னி பொழியும் ந‌திக்க‌ரையில்
நின்றிருந்தேன் வெகு நேர‌ம்

வின்னைத் தாண்டி வ‌ரும் வ‌ழியில்
காவ‌ல் வைத்திருந்தேன் என் விழியை
அதில் செய்தியில்லை, என்னுள் செய‌லுமில்லை
இனி செதில்க‌ளுக்கும் உயிர் சொந்த‌மில்லை

யார் அடித்தும் வ‌லித்த‌தில்லை உன்
க‌ண் அடியில் காத‌ல் விதைக்கும் முன்னே
நீ உழுது பின் நான் விளைந்த‌ அந்த‌
ம‌னி ம‌னியான‌ ம‌ணிப்பொழுதில் நான்
ம‌ல‌ர்ந்து விட்டேன், ஏன் இல்லை நீ
என் அருகினில்!

க‌ட‌வுளின் வாச‌ம், நான் க‌ண்டு கொண்ட‌
அந்த‌ ச‌ந்திப்பொழுதின் தோள் சாய்த‌தில்,
உன் சாய‌ல் க‌ண்ட‌ க‌ட‌வுளிட‌ம், நான்
சாந்தி கொண்டேன் உன் ச‌ம‌ய‌த்திட‌ம்!

ந‌திக்க‌ரையெல்லாம் நீல‌ம் ப‌டிந்து
என் நீண்ட‌ பிரிவை க‌ல‌ந்து வைக்கும்
நீ வ‌ருகையிலே அதில் கால் ந‌னைத்து
என் உயிரின் மிச்ச‌த்தையும் க‌ரைத்துவிடு.

Tags:

எத்துனை எழுத்துக‌ள்,
பின் வார்த்தைக‌ள்,

கோர்தெழுத்ப்ப‌ட்ட‌ எதுகைக‌ள‌,
எழில்மிகு உவ‌மைக‌ள்,

ம‌ன‌ம்கொண்ட‌ ப‌டிம‌ங்க‌ள்,
ஆசையின் அலாய்ப்புக‌ள்,

இப்ப‌டியெல்லாம் எழுத‌ப்ப‌ட்ட‌
என் க‌விதைக‌ள்
விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்காக‌வே
உன் கை சேர்கின்ற‌ன‌!

ஏனோ உன் வாஞ்சையால்
அவைக‌ள் விருச்ச‌ங்களாகின்ற‌ன‌.

Tags:

ஆயிர‌ம் முறை சொன்னாலும்
அறிவே இல்லை உன‌க்கு என்று
முத்த‌மிடுகையிலெல்லாம்
யுத்த‌மிடுகின்றாய் என்னோடு

ச‌ளைக்காம‌ல் எச்சிலை அழித்து
ச‌த்த‌மில்லாம‌ல் இப்போதாவ‌திடு என்று
உன் க‌ன்ன‌ம் காட்டுகின்றாய்

இம்சையே!
ச‌த்த‌திற்காக‌ யுத்த‌மிடுகிறாயா?
முத்த‌திற்காக‌ ச‌த்த‌மிடுகிறாயா?

Tags: ,

வ‌ச‌ப்ப‌டாத எழுத்துக்க‌ளுக்கிடையில்
வாசித்த‌ வார்த்தைக‌ள் ந‌ம‌க்கான‌
இடைவெளியை அனைத்துக்கொண்ட‌து

என‌க்கு நான் எழுதி அனுப்புவ‌தும்
உன‌க்காக‌ நீ எழுதிக் கொண்ட‌தும்
எழுத்துக‌ளை தாண்டி மெய்யும் உயிரும்
இனைந்த‌ த‌ருண‌ங்க‌ளில் வாழ்ந்த‌
வாழ்கையின் நினைவ‌லைக‌ள்
இன்ன‌முன் தபால் பெட்டியுள்!

நான் எழுதிய‌ மெய்யும்
நீ எழுதிய‌ உயிரும்
ஏதோ ஒரு அஞ்ச‌ல் நிலைய‌த்தில்
ச‌ந்தித்து, என்னையும் உன்னையும்
ந‌ல‌ம் விசாரித்த‌ நிக‌ழ்வை நான்
ப‌டித்த‌ உன் க‌டித‌ம் சொல்லிய‌து.

அன்பே தெரியுமா உன‌க்கு!
உன் க‌டித‌ம் என் க‌டித‌த்தின்மேல்
ச‌ந்தித்த‌ நொடியில்
காத‌ல் வ‌ச‌ப்ப‌ட்ட‌தாம்,

உன‌க்க‌னுப்பிய‌ க‌டித‌த்தின்்
ந‌க‌ல் கேட்டு காத்துக்கிட‌க்கின்ற‌து
இங்கு!

என் பொக்கிஷ‌க்குவிய‌லுக்கு
செல்ல‌ ம‌றுத்து!

Tags: ,

நான் எழுதி அனுப்பிய
உன் நினைவுக‌ள்
வ‌ந்த‌டைய‌ நாட்க‌ள்
ப‌ல‌ ஆனாலும்
உன்னை அ‌டைந்து
என்னை நிஜ‌மாக்கி த‌ரும்
உன்னிட‌ம் என்றே

இன்றும் எழுதிம‌டிக்கின்றேன்
பொக்கிஷ‌த்தை!

Tags:

 * உன் இமைக‌ளை
சிற‌க‌டித்து நீ சிரிக்கும் போதேல்லாம்
பூமிக்கும் வானுக்கும் ம‌த்தியில்
வாழ்ந்துவிடுகின்ற‌து
என‌து உயிர்.

* இத‌ழ்குவித்து காத்துகிட‌க்கின்ற‌து
என் தோட்ட‌த்தில் ரோஜா செடிக‌ள்
எப்போத‌டி உன் இத‌ழ்குவித்து
முத்த‌மிட்டு, இத‌ழ்பிரிக்க‌ச் செய்வாய்
ரோஜாக்க‌ளை!.

* நான் இமைக்காம‌ல்
பார்க்க‌ துடிப்ப‌து
நீ இமைப்ப்‌தைத்தான்.

Tags: , ,


நாம் சண்டையிட்டு
பிரிந்த அந்த
கடற்கறை சந்திப்பின்
அடையாளச்சின்னம்

இன்னமும்
அங்கேயே வானம்பார்த்து
வரமொன்று கேட்டு
தவம் செய்கின்றது.

மனசை நகங்களில்
வைத்திருக்கும் தேவதையே
உன் கைசேர!

என்னைபோலவே!!

« Older entries § Newer entries »

Page optimized by WP Minify WordPress Plugin

WordPress › Error

Sorry, you are not allowed to access this page.