காதல்

You are currently browsing articles tagged காதல்.


* இற‌கு தொலைத்த‌
ப‌ற‌வை போல‌
உன்னை தேடுகின்றேன்
வ‌ன‌மெல்லாம்

எங்காவ‌து உன் வாச‌த்தின்
சாய‌லில் நான் விழ்ந்து கிட‌க்கின்றேனா? என்று.

* இலையின் அதிர்வில்
உதிர்ந்த‌ பூவின்
விசும்ப‌ல்

எனை விட்டு
நீ வீடு செல்லும்
அனைத்து பிரிவினிலும்.

* வெயில் தூர‌ளில்
குடை விரித்தாய்
கைப்பிடியில்
நான்

த‌விக்கும்
என் நினைவுக‌ளில்
உடைகின்ற‌து ஒரு
சிறு குமிழி.

* இத‌ழ் க‌ட‌ந்து
ம‌ழை ருசித்த‌
நாவிற்கு

வான‌ம்
குடை பிடித்த‌து
வான‌வில்.

Tags: ,

Page optimized by WP Minify WordPress Plugin

WordPress › Error

Sorry, you are not allowed to access this page.