தேவதைகளின் ஊர்வலம்

You are currently browsing articles tagged தேவதைகளின் ஊர்வலம்.

நீ நான்

எதை இழ‌ந்து தேடினாலும்
நீயே கிடைக்க‌ பெறுகிறாய்

எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து

எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ
அவைக‌ளே நீயாகிறாய்

பின் என்ன‌தான் செய்வ‌தாம்
உன்னை காத‌லிக்க‌ ம‌ட்டுமே செய்வ‌தை த‌விற!

Tags: ,

அலைக‌ளின் ந‌டுவில்
விடுத‌லை பெற்ற‌
விருச்சங்க‌ளில்
கறைந்தொழுகிய
க‌ட‌ற்க‌ரை ம‌ண‌லில்
காத‌ல்

தீண்ட‌லில் தொட‌ங்கி
சூவாச‌த்தில் முடிய‌த் துடிக்கும்
ஷிருங்கார சாச‌ன‌த்தின்
சில்மிசியே!

என‌க்காக‌ ந‌ட‌த்த‌
உன் கால்க‌ளும்
உன‌க்காக‌ ம‌ண‌ல் அள்ளிய‌
என் கைக‌ளும்
ந‌ம‌க்கான‌ காத‌லை
ப‌திய‌ம் போட்ட‌து
க‌ரையெல்லாம்!

Tags: ,

சமவெளியில்
தொலைத்த முத்தத்தை
உன் இதழ்மடுவில்
தேடுகின்றேன்

கிடைக்கும் என்ற
நம்பிக்கை விட
தேடல் மட்டும்
நீடிக்கவே ஏங்குகிறது
மனசு!

பின் எப்படித்தான்
பழகுவதாம் குடை
மறைவினில் முத்தமிட்டு!

Tags: ,

Page optimized by WP Minify WordPress Plugin